fbpx

மின் மோட்டாருக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.15,000 மானியம்…! எப்படி பெறுவது…? முழு விவரம்

சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்றமின்‌ மோட்டார்களுக்குப்‌ பதிலாக மானியத்துடன்‌ கூடிய புதிய மின்‌ மோட்டார்கள்‌ வழங்கப்பட உள்ளது

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; சேலம்‌ மாவட்டத்தில்‌ விவசாயிகளின்‌ நிலத்தடிநீர்‌ பாசனத்துக்கு உதவும்‌ வகையில்‌ நடப்பு ஆண்டிற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்‌ மோட்டார்களுக்கு பதில்‌ புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்‌ வாங்குவதற்கு தமிழ்நாடு அரசு, வேளாண்மை பொறியியல்‌ துறையின்‌ மூலம்‌ 230 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம்‌ வீதம்‌ ரூ.34.50 இலட்சத்திற்கு மானியம்‌ வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே மின்‌ இணைப்பு பெற்றுள்ள 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள்‌ பழைய திறனற்ற மின்மோட்டார்‌ பம்புசெட்டுகளை மாற்ற விரும்புபவர்கள்‌, புதிய ஆழ்துளை கிணறு, திறந்த வெளி கிணறு அமைத்து 10 குதிரை திறன்‌ வரை புதிய மின்‌ மோட்டார்‌ பம்புசெட்டு வாங்க விரும்புபவர்கள்‌ பட்டா, சிட்டா, அடங்கல்‌, நில வரைபடம்‌, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய விவரங்களுடன்‌ அருகில்‌ உள்ள வேளாண்‌ பொறியியல்‌ துறை அலுவலகங்களை அணுகலாம்‌.

Vignesh

Next Post

வகுப்புகள் எப்படி நடத்த வேண்டும்...? தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு...!

Mon Jun 19 , 2023
இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறியதாவது; தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை எண்ணும், எழுத்தும் பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே, எக்காரணம் கொண்டும் 1,2 மற்றும் 3-ம் வகுப்புகளுடன், 4 மற்றும் 5-ம் வகுப்பு மாணவா்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தக்கூடாது. அதாவது, இரண்டு ஆசிரியர் பள்ளிகளில் 1, 2, 3-ஆம் வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியரும், 4, 5-ஆம் வகுப்புகளுக்கு மற்றொரு ஆசிரியரும் […]

You May Like