கேரளாவில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு நீரில் மூழ்கி 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு ஒன்று மூழ்கிய சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய மாநில அமைச்சர் வி.அப்துரஹிமான், தனுர் பகுதியில் உள்ள துவால்த்திரம் கடற்கரை அருகே படகு கவிழ்ந்து மூழ்கியதில் 20 பேர் இதுவரை உயிரிழந்தனர். 30 பேர் படகில் பயணம் செய்தனர்.
மேலும் பலர் படகின் அடியில் சிக்கி உள்ளனர். அவர்களை வெளியே கொண்டு வர மீட்பு குழுவினர் மீட்பு பணி நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளனர். படகு கவிழ்வதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. போலீசார் இது குறித்து விசாரணை நடத்துவார்கள்,” என்று அவர் தெரிவித்தார்.