ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனமானது, தற்போது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் மேலாளர் பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ஆர்வமாக இருக்கும் மற்றும் தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆகவே விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 45 என இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதோடு, வயதுவரம்பு தொடர்பு குறித்த மேற்பட்ட விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், graduate பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 50,000 முதல், 1,60,000 ஆயிரம் ரூபாய் வரையில் ஊதியமாக வழங்கப்படும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. பதிவு செய்ய ஆர்வமாக இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வமான அறிவிப்பில் சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு அறிவிப்பின் கொடுக்கப்பட்டிருக்கின்ற முகவரியின் மூலமாக விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்படுகிறது
Download Notification & Application Form Link