தம்பியுடனான சண்டையின்போது வாயில் செல்போனை வைத்திருந்த மாணவி அதை அப்படியே விழுங்கிய சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. நீண்ட நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்து செல்போனை அகற்றி உள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் பிந்து பகுதியில் தான் இச்சம்பவம் நடைபெற்று இருக்கிறது. அங்குள்ள ஒரு குடும்பத்தைச் சார்ந்த 17 வயது சிறுமியும் அவரது தம்பியும் செல்போன் பாவிப்பது தொடர்பான சச்சரவையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தம்பியிடம் இருந்து செல்போனை கைப்பற்றிய அந்த பெண் தனது வாயில் போனை கடித்தவரே தம்பியிடம் சண்டை செய்து இருக்கிறார் . திடீரென வாயிலிருந்து செல்போனை மறந்து கத்தியதால் அவரது வாய் வழியாக வயிற்றுக்குள் சென்றுள்ளது செல்போன்.
அது பழைய கையடக்க மாடல் பட்டன் செல்போன் என்பதால் தொண்டையில் சிக்காமல் நேரடியாக உணவுக் குழாய்க்கு சென்று விட்டது. சிறுமிக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்படவே பதவியை பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள மருத்துவர்கள் கைவிட்டதால் தலைநகர் குவாலியர் சென்று தனியார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஸ்கேன் மூலம் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் செல்போன் இருக்கும் இடத்தை உடனடியாக ஆராய்ந்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மூன்று மணிநேர அறுவை சிகிச்சையில் அந்தப் பெண்ணின் வயிற்றில் இருந்த செல்போன் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சையை தவிர வேறு எந்த பெரிய பாதிப்பும் இல்லாததால் சிறுமி நலமுடன் உடல் நலம் தேடி வருகிறார். தற்போது கோடை விடுமுறை தினங்களும் வர இருப்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.