fbpx

தமிழ்நாடு முழுவதும் 17,44,892 புதிய குடும்ப அட்டைகள்…! அமைச்சர் சொன்ன மகிழ்ச்சியான செய்தி…!

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 17,44,892 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு 2600 நியாய விலைக் கடைகள் புதியதாக திறக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் பேசிய அவர்; 1972 ஆம் ஆண்டு கலைஞர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் விவசாயிகளின் கடின உழைப்பினால் உற்பத்தி செய்யப்படும் நெல் மணிகளைக் கொள்முதல் செய்து அரவை ஆலைகள் மூலம் அரிசியாக்கி, பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்து கிடங்குகளில் இருப்பு வைத்து, நியாய விலை அங்காடிகளுக்கு நகர்வு செய்து தமிழ்நாட்டு மக்களின் பசியாற்றி வரும் உன்னதப் பணியினை மேற்கொண்டு வருவதுடன், தரமான பொருள் நியாயமான விலை என்ற கோட்பாட்டுடன் அமுதம் மக்கள் அங்காடிகள் மூலம் பொதுமக்களின் குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 17,44,892 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு 2600 நியாய விலைக் கடைகள் புதியதாக திறக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் இடங்களில் பகுதி நேர நியாயவிலைக் கடைகள் திறக்கப்பட்டு, நகரங்களில் 1000 குடும்ப அட்டைகள் மற்றும் கிராமப்புறங்களில் 800 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் நியாய விலைக் கடைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

மேலும் உழவர் பெருமக்கள் மற்றும் பொது மக்கள் உபயோகப்படுத்தும் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை நல்ல தரத்துடனும், சரியான அளவிலும் விற்பனை செய்திடும் வகையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், சிவாயம் வடக்கு கிராமத்தில் அமைந்துள்ள கிருஷ்ணராயபுரம் வட்ட செயல்முறைக் கிடங்கு வளாகத்தில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட்., நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 16 கிலோ லிட்டர் பெட்ரோல் மற்றும் 22 கிலோ லிட்டர் டீசல் கொள்ளளவு கொண்ட 1214.78 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டிமுடிக்கப்பட்ட எரிபொருள் விற்பனை நிலையம், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களால் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.

இந்த பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையத்தில், வாடிக்கையாளர்கள் எளிதாக பணம் செலுத்துவதற்கு ஏதுவாக மின்னனு பணப்பரிமாற்றம் வசதிகள் (GPAY. Phonepay. Paytm etc..) செய்யப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்காகவும் விற்பனை வளாகம் முழுவதும் கண்காணிப்புக் கருவி (CCTV Camera) பொருத்தப்பட்டுள்ளது. மேலும் தனியார் எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு இணையாக நைட்ரஜன் (N2) இணைப்புடன் கூடிய காற்று நிரப்பும் இயந்திரம் பொருத்தப்பட்டு வாடிக்கையாளர்களின் வாகனங்களின் சக்கரங்களுக்கு விலையில்லாமல் காற்று நிரப்புவதுடன், பொதுமக்களின் தாகத்தினைத் தீர்த்திடும் வகையில் குளிரூட்டப்பட்ட குடிநீர் வசதியும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழ்நாடு முழுவதும் இம்மாதிரியான எரிபொருள் விற்பனை நிலையங்கள் தேவைக்கேற்ப திறந்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

English Summary

17,44,892 new family cards across Tamil Nadu

Vignesh

Next Post

இந்த ஒரே ஸ்ப்ரே போதும், இனி உங்க வீட்டுக்கு கரப்பான் பூச்சி, பல்லி, எறும்புனு எதுவும் வராது..

Wed Jan 29 , 2025
spray to prevent from ant, cockroach etc..

You May Like