fbpx

சற்றுமுன் வெளியான அறிவிப்பு…! ஜூன் 17-ம் தேதி பொது விடுமுறை…!

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ஜூன் 17-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இஸ்லாமியர்களின் ஈகை திரு நாளான பக்ரீத் பண்டிகை வருகிற ஜூன் 17-ம் தேதி கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சுல்தான் சலாஹுதீன் முகமது அய்யூப் அறிவித்துள்ளார்.

துல்ஹஜ் பிறை நேற்று தென்பட்டதால் ஜூன் 17-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 17-ம் தேதி தமிழ்நாடு அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

17th June has been declared as a public holiday across Tamil Nadu on the occasion of Bakrit.

Vignesh

Next Post

இரண்டு மணி நேரத்திற்கு ரூ.750... கலை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பு...! முழு விவரம்

Sat Jun 8 , 2024
Teachers are to be appointed in Santhoothi to impart art training.

You May Like