தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பராமரித்து வருகிறது. அதேசமயம், நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலித்து வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 72 சுங்கச்சாவடிகள் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.26,000 கோடியை சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் ரூ.20,000 கோடி மதிப்பில் 963 கிமீ நீளமுள்ள 4 வழிச்சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த பணிகள் இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறவுள்ளதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைகளில் 18 புதிய சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 72இல் இருந்து 90ஆக உயர உள்ளது.