fbpx

அடடே.! பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் 19,484 சிறப்பு பேருந்துகள்.! அமைச்சரின் சூப்பரான அறிவிப்பு.!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் வேலை பார்க்கும் தமிழகத்தின் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு சிறப்பு பேருந்து வசதிகளை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

இதன் படி பொங்கல் பண்டிகைக்கு முன்பாக ஜனவரி 12 முதல் 14 தேதிகளில் தமிழகம் முழுவதிலும் 19,484 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருக்கிறார். சென்னையில் மட்டும் 11,006 பேர் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.

இந்தப் பேருந்துகள் பூந்தமல்லி தாம்பரம் . கோயம்பேடு கிளாம்பாக்கம் பேருந்து நிலையங்களில் இருந்து செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கல் பண்டிகையை முடித்து ஊர் திரும்புவதற்கு வசதியாக 17,589 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். பொங்கல் பண்டிகைக்கு ஊர் சென்று திரும்புபவர்கள் எந்தவித நெருக்கடியும் இன்றி பயணம் மேற்கொள்ள இந்த வசதிகளை அரசு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Next Post

மாணவர்களே வீட்டுக்கு கவனமா வாங்க..!! 10 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்..!! 23 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்..!!

Mon Jan 8 , 2024
தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த ஒருசில நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் […]

You May Like