fbpx

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 198 வேலைவாய்ப்புகள்!… முழு விவரம் இதோ!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைகளில் இருக்கும் பல்வேறு பிரிவுகளில் உள்ள 198 வேலைவாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிட அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மொத்தமாக 27 துறைகளில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க இளங்கலை மருத்துவ படிப்பான MBBS , பல் மருத்துவ படிப்பான BDS ஆகிய பட்டங்களை பெற்றிருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க, 25,000 ரூபாய் டெபாசிட் தொகையாக கட்ட வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு உறுதியான பின்பு தொகை திருப்பி செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்க்கான விண்ணப்பங்கள் தொடங்கும் தேதி 03 ஜூன் 2023 என அறிவிக்கப்பட்டுள்ளது . கடைசி தேதியாக 17 ஜூன் 2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வ தளமான jr.aiimsexams.ac.in-க்கு செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் உள்ள NOTIFICATION எனும் லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் விண்ணப்பிக்கும் முறை, காலிப்பணியிட விவரங்கள் , கல்வித்தகுதி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அதில் இடம்பெற்று இருக்கும். அதன் படி உரிய காலிப்பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Kokila

Next Post

NExT தகுதித்தேர்வு!... அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்!... சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

Sat Jun 10 , 2023
முதுநிலை நீட் தேர்வு மற்றும் இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வை ஒருங்கிணைத்து NExT தகுதித்தேர்வு நடைபெறும் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. எம்பிபிஎஸ் முடித்த மாணவர்கள் மருத்துவராக பணியாற்றவும், வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று இந்தியாவில் பதிவு செய்து பணியாற்றவும் National Exit Test (NExT) என்ற தகுதித்தரவு அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. முதுநிலை நீட் தேர்வு மற்றும் இறுதியாண்டு எம்பிபிஎஸ் தேர்வை ஒருங்கிணைத்து […]

You May Like