fbpx

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 19-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்…! கல்வி தகுதி என்ன…?

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம். நங்கவள்ளியில் உள்ள கைலாஷ் மகளிர் கல்லூரி வளாகத்தில் வருகின்ற 19.09.2023 அன்று சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது செய்தி குறிப்பில்; கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு. சேலம் மாவட்டத்தில் மூன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

வருகின்ற 19.09.2023 அன்று சேலம் மாவட்டம் நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த பல முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி கைலாஷ் மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறவிருக்கும் முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வி தகுதி உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். முகாமில் கலந்துக்கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

நாகை மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை...! ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!

Wed Sep 6 , 2023
நாகை மாவட்டத்திற்கு வரும் 8-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி மாதா பேராலையத்தில் ஆண்டு தோறும் பெருவிழா நடைபெறுகிறது. ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கிய வேளாங்கண்ணி பேராலய பெருவிழா வரும் 8-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான வேளாங்கண்ணி அன்னையின் பிறந்தநாள் விழா வருகின்ற 8-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நாகை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை […]

You May Like