fbpx

தூள்…! அரசு கொடுக்கும் ரூ.2.25 லட்சம்‌ மானியம்…! ஆன்லைன் மூலம் நீங்களே விண்ணப்பிக்கலாம்…!

தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ வீட்டுவசதி மற்றும்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ (தாட்கோ) மூலமாக தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும்‌ வகையில்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ கழகத்தின்‌ விற்பனை முகவர்‌ திட்டத்தில்‌ வருவாய்‌ ஈட்டிட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சித்‌தலைவர்‌ தெரிவித்துள்ளார்‌.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர்‌ நலத்துறை அமைச்சர்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும்‌ வகையில்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ விற்பனை முகவர்‌ திட்டத்தை அறிவித்தார்கள்‌. இத்திட்டத்தில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்கள்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ கழகத்தின்‌ விற்பனை முகவராகவும்‌ மற்றும்‌ இதர கட்டுமான பொருட்கள்‌ மூலம்‌ விற்பனை செய்து வருவாய்‌ ஈட்டிட தாட்கோ இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது.

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின இனத்தை சார்ந்தவர்கள்‌ தமிழ்நாடு சிமெண்ட்‌ கழகத்தின்‌ விற்பனை முகவராக வயது வரம்பு 38 முதல் 65 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும்‌. ‘திட்டத்தொகையில்‌ 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 இலட்சம்‌ மானியமும்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சம்‌ ரூ.3.75 இலட்சம்‌ மானியம்‌ அளிக்கப்படும்‌.

இத்திட்டத்தில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியின தொழில்‌ முனைவோர்‌ www.tahdco.com என்ற இணையதள முகவரியில்‌ புகைப்படம்‌ மற்றும்‌ தொடர்புடைய ஆவணங்களுடண்‌ பதிவு செய்ய வேண்டும்‌. மேலும்‌ விபரங்களுக்கு தட்கோ மாவட்ட மேலாளர்‌ அலுவலகத்தை அணுகி விவரம்‌ பெற்று உரிய ஆவணங்களுடன்‌ பதிவேற்றம்‌ செய்யலாம்‌.

Vignesh

Next Post

புதிய வாக்காளர் விவரங்களை கட்சித் தலைமைக்கு அனுப்ப வேண்டும்...! பாமக நிறுவனர் ராமதாஸ் அதிரடி உத்தரவு....!

Tue Oct 24 , 2023
வாக்குச்சாவடி வாரியாக பா.ம.க சார்பில் சேர்க்கப்பட்ட புதிய வாக்காளர்களின் விவரங்களை கட்சித் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கையாக மாவட்ட செயலாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டு, டிசம்பர் 9-ஆம் நாள் வரை புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த […]

You May Like