fbpx

திருவாரூரில் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு…!

திருவாரூரில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் வரும் சனிக்கிழமையன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் சேர்க்கை முகாம் நடைபெறுவதை ஒட்டி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தார் மாவட்ட ஆட்சியர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அந்தந்த வாக்குப் பதிவு மையங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள். நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இணையதளம் மூலம் www.nvsp.in மற்றும் www.elections.tn.gov.in என்ற முகவரியிலும், Voter helpline app என்ற கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

இடது கையில் வாட்ச் கட்டுவதில் இத்தனை காரணங்களா?… உங்களுக்கு என்ன காரணம்?

Fri Nov 24 , 2023
நமக்கு வரும் ஒவ்வொரு அடுத்த விநாடியும் சாதகமாகவும் இருக்கும் அல்லது பாதகமாகவும் அமையும். அந்தளவுக்கு மனிதனின் வாழ்க்கை பிரதானமான ஒன்றாக இருக்கின்றது. அதில், மனிதனுக்குண்டான நேரம் என்பது கூடுதல் இடத்தைப் பிடிக்கின்றது. நேரத்தைப் பற்றிய அக்கறை மனிதர்களிடம் எப்பொழுதுமே இருக்க வேண்டிய ஒன்றாகும். ஒரு மனிதனிடம் விலை மதிக்க முடியாத ஒரு பொருள் இருக்கின்றது என்றால், அதை அவன் எவ்வளவு பயனுள்ளதாக பயன்படுத்த நினைப்பான். அந்தப் பொருள் அவனிடம் இருக்கும் […]

You May Like