சமூக வலைதளங்கள் மூலமாக ஒருவருடன் பழகும் போது நிச்சயம் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் பலமுறை எச்சரித்து இருக்கிறார்கள். ஆனாலும், அதனை தற்போதைய இளைய தலைமுறையினர் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் செயல்படுவதால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிறார்கள்.
அந்த வகையில், சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் தன் பாலின டேட்டிங் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்தார். அந்த செயலியில் அறிமுகமான ஒரு நபர் அந்த மாணவரிடம் ஆபாசமாகவும், நெருக்கமாகவும் பேசி வந்ததாக சொல்லப்படுகிறது.
ஆகவே ஒரு ரகசிய இடத்தில் சந்திக்க அந்த மாணவரை அழைத்த அந்த நபர், அந்த கல்லூரி மாணவரை நிர்வாணமாக செல்போனில் வீடியோ எடுத்து பணம் மற்றும் நகையை கேட்டு மேலும் சிலருடன் சேர்ந்து மிரட்டியதாக தெரிகிறது.
இதன் காரணமாக, பயந்து போன அந்த கல்லூரி மாணவர், 13000 ரூபாய் பணம் மற்றும் செல்போன் உள்ளிட்டவற்றை அந்த கும்பலிடம் கொடுத்துவிட்டு வந்து விட்டார். மேலும் அந்த கும்பல், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் வழங்கினால் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி, அந்த கல்லூரி மாணவரை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த கல்லூரி மாணவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மற்றும் மதுரையைச் சேர்ந்த தேவேந்திரன் உள்ளிட்டோர்தான் இந்த கல்லூரி மாணவரிடம் மிரட்டி பணம் பறித்தனர் என்பது தெரிய வந்தது.
அதோடு, டேட்டிங் செயலியில் போலியான பெயரில் ஐடியை ஏற்படுத்தி, பலரை மிரட்டி பணம் பறித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அந்த இரண்டு இளைஞர்களும் என்ற விவரம் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, , தலைமறைவாக இருக்கின்ற தேவேந்திரன் மற்றும் ராஜ்குமார் என்ற இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.