உத்தரபிரதேச மாநிலம், முசாஃபர் நகரில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 17 வயதான மகள் ஒருவர் உள்ளார். இவர்களின் மூத்த மகளான இவர், கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், இந்த தம்பதியின் இளைய மகள் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இந்த தம்பதியின் மகள்கள் இருவரும் தங்களுக்கு செல்போன் வாங்கி தர வேண்டும் என்று அவர்களின் பெற்றோரிடம் கேட்டுள்ளனர்.
ஆனால் அவர்களின் பெற்றோர், செல்போன் வாங்கி தர தாமதம் ஆக்கியுள்ளனர். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி சகோதரிகள் இருவரும் தனது தாயிடம் மொபைல் போன் வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்துள்ளனர். ஆனால், அவர்களின் பெற்றோர் குடும்ப சூழ்நிலை காரணமாக தங்களால் வாங்கி தர முடியவில்லை என்று தங்களின் வறுமையை காரணம் காட்டியுள்ளனர்.
மேலும், தங்களின் தந்தையால், பள்ளி செலவை மட்டுமே கவனிக்க முடியும் என்று எடுத்துக் கூறியுள்ளனர். இதையடுத்து, தற்போது உள்ள சூழ்நிலையில் தங்களால் மொபைல் போன் வாங்கி கொடுக்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளனர். இதனால் மன விரக்தி அடைந்த இரண்டு சகோதரிகளும் தங்களின் அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மறுநாள் காலை, தனது மகள்கள் இறந்து கிடப்பதை பார்த்து தாய் கதறி துடித்துள்ளார். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல், அவர்களே சிறுமிகளின் உடலை தகனம் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிய வந்ததை அடுத்து, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more: வீட்டில் இருந்து கேட்ட முனங்கள் சத்தம், வாடகைக்கு வீடு எடுத்து 57 வயது ஆன்டி செய்த காரியம்..