fbpx

கிருஷ்ணகிரியில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து!. 3 பேர் உயிரிழப்பு!. 4 பேர் படுகாயம்!.

Accident: கிருஷ்ணகிரியில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவில் இருந்து லாரி ஒன்று சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்தது. இதேபோல், ஆந்திராவில் இருந்து கேரளா நோக்கி மற்றொரு லாரி சென்றுக்கொண்டிருந்தது. இந்தநிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அத்துமரத்துப்பள்ளம் பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், படுகாயமடைந்த 4 பேரை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதேபோல் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Readmore: இரவு தூங்கும்முன் இந்த எண்ணெய் கொண்டு உள்ளங்கால்களை மசாஜ் செய்யுங்கள்!. இந்த 5 பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்!.

English Summary

2 trucks collide head-on in Krishnagiri! 3 dead! 4 seriously injured!

Kokila

Next Post

அஜித்தை வைத்து மாஸ் திட்டம்?. விருது அரசியலை முன்னெடுக்கிறதா திமுக, பாஜக?.

Sun Jan 26 , 2025
Mass project using Ajith? Are DMK and BJP pursuing award politics?

You May Like