கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அங்கே பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றார்.
மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் முதல் குடும்ப தலைவிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்படும் அந்தத் தொகை வாங்கி கணக்குகளில் செலுத்தப்படும் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்திருக்கிறார்.
இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த சித்தராமையா, ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரையில் 2000 ரூபாய் ஊக்கத்தொகை விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும், ஊக்கத்தொகை பெற வறுமை கோட்டுக்கு கீழே உள்ள மற்றும் வறுமை கோட்டுக்கு மேல் என வேறுபாடு இல்லை என கூறியுள்ளார்.