நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை நாம் வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்று, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக இருக்கும் 2000 ப்ரோபேஷனரி அதிகாரிகள் பணியிடங்களுக்கு ஆள் சேர்க்கை நடைபெறுகிறது என்ற அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள், ஏதாவது, ஒரு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அப்படி தேர்ச்சி பெற்றிருந்தால், இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியானவர்களாக கருதப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களின் வயது 30க்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு, செப்டம்பர் மாதம் 27ஆம் தேதிக்குள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள், prelims exam, interview,main exam போன்றவற்றின் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல பழங்குடியினர் வகுப்பை சார்ந்தவர்கள் வயது வரம்பில் தளர்வுகள் பெறுவதற்கான சலுகையும் வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ஒன்றுக்கு, 41, 960 ரூபாய் வரையில் ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதோடு, இந்த பணிக்கான விண்ணப்பத்தை பெறுவதற்கு 750 ரூ விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களுக்கு, இந்த விண்ணப்ப கட்டணத்தில் இருந்து சலுகை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் மற்றும் வயது வரம்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற தளர்வுகள் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் உள்ளிட்டோர், ibps.in என்ற இணையதளத்தை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு,”RECRUITMENT OF PROBATIONARY OFFICERS
ADVERTISEMENT NO: CRPD/PO/2023-24/19 ” என்ற இனிப்பை கிளிக் செய்து விண்ணப்பம் செய்ய வேண்டும்.
.
.