கெளரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியம் வழங்கப்பட உள்ளது.
2023 – 2024ஆம் கல்வி ஆண்டிற்கு சுழற்சி 1 பாட வேளையில் ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட 4, 318 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுடன், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 அரசு கல்லாரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட 1381 கெளரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கும் அனுமதி வழங்கவேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநர்அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளார்.
மேலும், கெளரவ விரிவுரையாளர்கள் நியமனம் பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்து உள்ள கல்வித் தகுதி மற்றும்பிற உரிய விதிகளின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும். தொகுப்பூதியத்தின் அடிப்படையில் 11மாதங்கள் பணி புரியும் கெளரவவிரிவுரையாளர்கள், தங்களது பணிக்காலத்தில் இடைநிற்றல் ஏற்பட்டாலோ இறப்பு அல்லது இதர காரணங்களின்அடிப்படையில் காலிப் பணியிடம்உருவாகும் போதோ பணியிடத்தினைஅரசின் அனுமதி பெற்ற பின்னரே நிரப்பவேண்டும்.
அரசு ஏற்கனவே வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் ஒரு ஆசிரியருக்கு 30மாணவர்கள் என்ற அடிப்படையில் அமைவதை உறுதி செய்ய வேண்டும். விதிமுறைகளைப் பின்பற்றி 2023 -2024ஆம் கல்வி ஆண்டில் 5, 699 கெளரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்வதற்கு உயர் கல்வித்துறை அனுமதி வழங்குகிறது. இவர்களுக்கு 11மாதத்திற்கு மாதம் 20 ,000 வீதம் தொகுப்பூதியம் வழங்கப்பட வேண்டும். என்று உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளது .