வெள்ளியின் முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக தாக்கி பேசியிருக்கிறார். இது தொடர்பாக கூடிய அவர் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆம் ஆத்மி மிகப்பெரிய சவாலாக இருப்பதாக தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்திற்கு முன்னதாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியை சேர்ந்த மணிஷ் சிசோடியாவை கட்சியை விட்டு வெளியேறுமாறு பாஜக கேட்டுக் கொண்டதாக குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் பிஜேபி அரசாங்கத்தால் தன்னைத்தான் கைது செய்ய முடியுமே தவிர தனது சிந்தனையை அல்ல எனவும் கூறினார். மேலும் 2029 இல் பிஜேபி இல்லாத இந்தியாவை அமைப்போம் எனவும் உறுதியாக கூறினார்
டெல்லி சட்டசபையில் அரவிந்த் கெஜ்ரிவால் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் தொடங்கியது. அப்போது பேசிய கெஜ்ரிவால் தனது கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களை பாஜக கைப்பற்ற முயல்வதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக பேசிய கஸ்தூரிபா நகர் எம்எல்ஏ மதன் லால், கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதன் மூலமாகவோ அல்லது ஆம் ஆத்மி கட்சியினரின் செயல்பாடுகளில் தலையிடுவதன் மூலமாகவோ டெல்லியில் நடைபெறும் தங்கள் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.
இந்த அமர்விற்கு பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.அவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதுரி, விவாதம் தொடங்கியபோது அவையில் இல்லை. சிறிது நேரத்தில் அவர் சபைக்கு வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பை கொண்டு வந்திருக்கிறது. தங்களது கட்சியின் எம்எல்ஏக்களை பிஜேபி விலைக்கு வாங்கும் என்றதாக ஆம் ஆத்மி எழுப்பிய குற்றச்சாட்டை தொடர்ந்து தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 2022 ஆகஸ்ட் மற்றும் 2023 மார்ச் மாதங்களில் டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது ஆபரேஷன் தாமரை என்ற யுக்தியின் மூலம் ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பிஜேபி விலைக்கு வாங்க முயன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
70 எம்எல்ஏக்களை கொண்ட டெல்லி சட்டசபையில் 62 எம்எல்ஏக்களுடன் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்திருக்கிறது. பிஜேபி சேர்ந்த 8 எம்எல்ஏக்களில் 7 பேர் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியை சேர்ந்த 2 எம்எல்ஏக்களுக்கு 25 கோடி ரூபாய் பேரம் பேசி தங்கள் பக்கம் பாஜக இருக்கும் என்றதாக குற்றம் சாட்டினார். மேலும் அவர்களிடம் தாங்கள் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 21 எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் விரைவிலேயே ஆம் ஆத்மி ஆட்சி கலைக்கப்பட்டு அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் தங்கள் கட்சியைச் சார்ந்த எம்எல்ஏக்களிடம் விசாரித்ததில் ஏலி எம்எல்ஏக்களை பாரதிய ஜனதா கட்சி அணுகியிருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தனது கட்சியைச் சார்ந்த யாரும் பாஜகவில் திட்டத்திற்கு உடன்படவில்லை எனவும் கூறினார். டெல்லியில் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்ற முடியாத பாரதிய ஜனதா கட்சி இது போன்ற குறுக்கு வழிகளில் முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
பிஜேபி ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் என்றது தொடர்பாக பேசிய மற்றொரு எம்எல்ஏ குல்தீப் குமார் பிஜேபி மற்ற மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களையும் மிரட்டி பணிய வைத்தது போன்று டெல்லியிலும் செய்ய முடிகிறது. நாங்கள் அனைவரும் அரவிந்த் கெஜ்ரிவாலின் போர் வீரர்கள் எங்களை விலைக்கு வாங்க முடியாது. டெல்லி மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை யாராலும் தகர்க்க முடியாது என தெரிவித்திருக்கிறார்.