fbpx

11 ,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 20-ம் முதல் தொடக்கம்…! அனைவருக்கும் ஒரே நுழைவுச்சீட்டு…! முழு விவரம்

தமிழகம் முழுவதும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. அதன்படி 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. அதே போல 11-ம் வகுப்பிற்கு மார்ச் 4-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையிலும், 10-ம் வகுப்பிற்கு மார்ச் 26-ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பிப்ரவரி 20-ம் தேதி முதல் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; 12 -ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு, பள்ளி தலைமையாசிரியர்கள் 20-ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதேபோல் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை தனித் தேர்வர்களாக எழுத உள்ளவர்கள், வரும் 19-ம் தேதி முதல் www.dge.tn.gov.in என்ற இணையத்தளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்களுக்கு இரண்டுத் தேர்வுகளுக்கும் சேர்த்து ஒரே நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தீவிபத்தில் 7 பேர் உடல் கருகி பலி!… டெல்லி பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கரம்!

Fri Feb 16 , 2024
டெல்லி அருகே பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். டெல்லி அருகே உள்ள அலிபூர் மார்க்கெட்டில் தனியாருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றுமாலை சுமார் 5.15 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து 14 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், பெயிண்ட் தொழிற்சாலை என்பதால் […]

You May Like