உத்தரகண்டில் ஆற்றைக் கடக்க முயன்றபோது ஒடும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
உத்தரகண்டின் பதேபூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகின்றது. இந்நிலையில் பதேபூர் பகுதியில் உள்ள ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
இருபுறங்களிலும் தரைப்பாலத்திற்கு மேலே தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகளால் சாலையைக் கடக்கமுடியவில்லை. சாலையைக் கடக்க வந்த இருவர் வாகனத்தை நிறுத்திவிட்டு பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு இளைஞர் மட்டும் தரைப்பாலத்தை கடக்க முயற்சிக்கின்றார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதனால் பிடிமானம் எதுவும் கிடைக்கவில்லை. ஆற்றோடு அந்த 22 வயது இளைஞர் அடித்து செல்லப்பட்டார்.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்கள் மீட்பு படைக்கு தகவல் கொடுத்துள்ளார்கள்.
இருப்பினும் பல மணி நேரம் தேடியும் இளைஞர் இதுவரை கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.