fbpx

Google Play Store-இல் இருந்து 2,200 செயலிகள் நீக்கம்..!! உங்களிடம் இருந்தா உடனே டெலிட் பண்ணுங்க..!! மத்திய அரசு எச்சரிக்கை..!!

நிதி மோசடிகளில் இருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாக செப்டம்பர் 2022 மற்றும் ஜனவரி 2024 இடையே Google அதன் Play Store-இல் இருந்து 2,200 க்கும் மேற்பட்ட போலி கடன் செயலிகளை அகற்றியுள்ளது. பொய்யான கடன் செயலிகளை எதிர்த்து ஆர்பிஐ பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கே காரத் பதிலளித்தார்.

அதில், போலி கடன் செயலிகளின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்திய ரிசர்வ் வங்கி போன்ற அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு இடையேயான கூட்டு முயற்சிகளை எடுத்துரைத்தார். இந்த ஒத்துழைப்பின் மூலம் Google ஆயிரக்கணக்கான கடன் செயலிகளை மதிப்பாய்வு செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் Play Storeஇல் இருந்து 4,700 மோசடியான செயலிகளை நீக்கியுள்ளது.

மக்களுக்கான பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, கூகுள் பிளே ஸ்டோரில் கடன் செயலிகளுக்கான கட்டுப்பாட்டு கொள்கையை அதிகப்படுத்தியுள்ளது. ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனங்களால் வெளியிடப்பட்ட செயலிகள், ஆர்பிஐ மூலம் அனுமதி பெற்ற கடன் நிறுவனங்கள் மட்டுமே கடன் வழங்குவதற்கு இனி அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உங்கள் போனில் இந்த செயலிகள் இருந்தால் அது இயங்காது. ஆனால், சில செயலிகள் இயங்கும் பட்சத்தில் அந்த செயலிகளை தொடர்ந்து பயன்படுத்த கூடாது. அதில் இருந்து உடனே வெளியேற வேண்டும். இந்த செயலிகள் தொடர்பான புகார்களை ஆர்பிஐ தொடங்கி சைபர் கிரைம் வரை அளிக்கலாம். அதேபோல் இந்த செயலிகள் சார்பாக விடுக்கப்படும் மிரட்டல்களையும் போலீசாரிடம் புகாராக அளிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

"வேலை முடிஞ்சுதுன்னா மூட்டையை கட்டிடனும்.." பாஸ் கால் பண்ணாலும் கட் தான்."..!! புதிய சட்டம் வந்தாச்சு..!

Thu Feb 8 , 2024
தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் உலகின் பல்வேறு நாடுகளும் பலவிதமான சட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் அலுவலகப் பணியாளர்கள் தங்களது பணி முடித்து வீடு திரும்பியும் அலுவலக வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது . செல்போன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களின் வளர்ச்சிக்கு பிறகு இந்த தொந்தரவு மேலும் அதிகரித்து இருக்கிறது. வீடுகளுக்கு சென்ற பணியாளர்களிடம் அவர்களது ஓய்வு நேரங்களில் அவசர வேலைகளை முடிக்குமாறு கட்டளையிடும் வழக்கமும் […]

You May Like