ஒரே நாளில் ரூ.240 குறைந்த தங்கம் விலையில்.. மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,264-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.4,658க்கு விற்பனை செய்யப்படுகிறது…. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.37,264-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.60.70க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.60,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. முதலமைச்சருடன் இன்று முக்கிய ஆலோசனை.. அமைச்சர் வெளியிட்ட தகவல்..

Tue Jul 19 , 2022
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பைத் தொடர்ந்து பள்ளியில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி இந்த வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளது.. மாணவியின் தந்தை தொடர்ந்த நீதிமன்றமும் கடும் அதிருப்தியை பதிவு செய்ததுடன், வன்முறையாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியது.. மேலும் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி உயிரிழந்த மாணவியின் உடல் […]

You May Like