கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. முதலமைச்சருடன் இன்று முக்கிய ஆலோசனை.. அமைச்சர் வெளியிட்ட தகவல்..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி மெட்ரிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதியின் உயிரிழப்பைத் தொடர்ந்து பள்ளியில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த கலவரம் தொடர்பாக 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி இந்த வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளது.. மாணவியின் தந்தை தொடர்ந்த நீதிமன்றமும் கடும் அதிருப்தியை பதிவு செய்ததுடன், வன்முறையாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியது..

மேலும் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி உயிரிழந்த மாணவியின் உடல் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.. இதனிடையே தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் நேற்று சம்மந்தப்பட்ட தனியார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக இன்று எங்கள் துறை அதிகாரிகளிடம் முதலமைச்சர் வீடியோ கான்பிரன்ஸ் முறையில் ஆலோசனை நடத்த உள்ளார்.. கள்ளக்குறிச்சி பள்ளியில் என்ன நடந்தது.., அங்கிருக்கும் மக்களின் மனநிலை என்ன..? அந்த பள்ளியில் 3000-க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் நிலையில் அடுத்தக்கட்ட முடிவு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசிக்க உள்ளோம்.. முதலமைச்சர் வழங்கும் அறிவுறுத்தலின் படி உரிய தீர்வு காணப்படும்..

எரிந்து போன சான்றிதழ்களை பொறுத்த வரை, மீண்டும் அவற்றை பெற மிகவிரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.. மாணவர்கள் பெற்றோர்கள் கவலைப்பட தேவையில்லை.. பள்ளி கட்டிடத்தை சீரமைக்க ஒரு வாரத்திற்கு மேல் ஆகும்.. இந்த இடைப்பட்ட காலத்தில் கற்றல் இடைவெளியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இன்று ஆலோசனை நடத்த உள்ளோம்.. இந்த விவகாரத்தில் விரைவில் உரிய தீர்வு காணப்படும்..” என்று தெரிவித்தார்.

Maha

Next Post

படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காததால் வாலிபர் எடுத்த விபரீத முடிவு..! பேருந்து நிலைய கழிவறையில் பயங்கரம்..!

Tue Jul 19 , 2022
படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் முதுகலை பட்டதாரி இளைஞர், பேருந்து நிலைய கழிவறையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கீழ உத்தரங்குடி பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவரின் மகன் சுரேஷ்குமார் (35) இவருக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆன நிலையில், இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் கடந்த […]
தாயுடன் மாயமான குழந்தைகள்..!! கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்..!! வழக்கில் திடீர் திருப்பம்

You May Like