fbpx

9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ரூ.25,000….! எப்படி விண்ணப்பிப்பது…?

உலகெங்கும் இணையம் வழியாகத் தமிழ்க் கற்பித்தலை முதன்மை நோக்கமாகக் கொண்டு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ்ப் பண்பாடு, இலக்கண இலக்கியங்கள் சார்ந்த முன்னெடுப்புகளையும் செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சங்ககால மக்களின் வாழ்வைப் படம்பிடித்துக் காட்டும் சங்க இலக்கியப் பாடல்களை ஓவியங்களாக வரைந்து, விளக்கவுரை மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் நாட்காட்டியாக வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்குத் தேவைப்படும் ஓவியங்களுக்கு “சங்க இலக்கிய ஓவியப் போட்டியை” தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தவுள்ளது.

இப்போட்டியில், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களும், அனைத்து கல்லூரி மாணவர்களும், ஓவியர்களும் www.tamilvu.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம். மாணவர்கள் பட்டியலிடப்பட்ட பாடல்களுள் தங்களுக்குப் பிடித்தமான பாடலைத் தேர்வு செய்து ஓவியமாக வரைந்து பத்து நாட்களுக்குள் www.tamilvu.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, அஞ்சலில் அனுப்ப வேண்டும். (ஒரு பாடலை 5 நபர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும்). இந்தப் போட்டிக்கான இணைப்பு 27-11-2023 வரை செயல்பாட்டில் இருக்கும்.

மேலும், வண்ண ஓவியத்தின் அசலை (Original) அஞ்சலிலோ அல்லது நேரிலோ இயக்குநர், தமிழ் இணையக் கல்விக்கழகம், கோட்டூர், சென்னை 25 என்ற முகவரிக்கு உறையின் மேல் சங்க இலக்கிய ஓவியப்போட்டி என்று குறிப்பிட்டு 09-12-2023 க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவியங்களுக்குத் தலா ரூ.2000/- ஊக்கத்தொகையும் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் அவற்றில் சிறந்த ஓவியங்களுக்கு, பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்கள் என மூன்று பிரிவுகளில் முதல் பரிசாக ரூ.25,000/-, இரண்டாம் பரிசாக ரூ.15,000/-, மூன்றாம் பரிசாக ரூ.10,000 வழங்கப்படும்.

இப்போட்டிக்கான விதிமுறைகள் www.tamilvu.org என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்குத் 044-2220 9400, 86678 22210 என்ற எண் அல்லது tpktva@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Vignesh

Next Post

பற்களில் மஞ்சள் கரை இருக்கிறதா.? இந்த ஒரு பொருள் போதும் உங்கள் பற்கள் பளபளக்க.! ட்ரை பண்ணி பாருங்க.!

Mon Nov 20 , 2023
புன்னகை என்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அவ்வாறு புன்னகைக்கும் போது நமது பற்கள் மஞ்சளாகவோ இல்லை கரைப்படைந்தோ இருந்தால் அது நமக்கு அவசரத்தை ஏற்படுத்தலாம். இதனால் பற்களை தூய்மையாகவும் வெண்மையாகவும் வைத்துக் கொள்வதை அனைவரும் விரும்புவோம். இதற்காக பல ஆயிரங்களை செலவு செய்யாமல் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பற்களை எவ்வாறு வெண்மையாக மாற்றலாம் என பார்ப்போம். பற்களின் மஞ்சள் கறைகளை போக்குவதற்கும் வெண்மையாக்குவதற்கும் இயற்கையாக பயன்படக்கூடிய ஒரு […]

You May Like