fbpx

மாதம் 25,000 ரூபாய் சம்பளத்தில், பாரத் பெட்ரோலியம் வெளியிட்ட வேலை வாய்ப்பு அறிவிப்பு….!

பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், apprentice பணிக்கு, 125 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு சேர விரும்பும் நபர்கள் கடைசி நாள் முடிவடைவதற்குள், விண்ணப்பம் செய்து பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்தப் பணிக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு, வயது 18 முதல், 27 வரையில் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வயது வரம்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற தளர்வுகள் பற்றி அறிவதற்கு, அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பார்வையிடலாம்.

இங்கே பணியாற்ற விரும்பும் நபர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட, பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ஒன்றுக்கு, 25,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொண்டிருக்கிறது.

திறன் வாய்ந்த நபர்கள் நேர்காணல் மூலமாக, தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்ற இணையதளம் மூலமாக, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை முறையாக பூர்த்தி செய்து இணையதளத்தின் மூலமாக, வரும் 15-9-2023 அன்று மாலைக்குள்  விண்ணப்பம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Next Post

”சனாதனத்திற்கு எதிராக யார் பேசினாலும் அவரது நாக்கை பிடுங்குவோம்”..!! மத்திய அமைச்சர் சர்ச்சை பேச்சு..!!

Tue Sep 12 , 2023
அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன ஒழிப்பு தொடர்பாக பேசியதை கண்டித்து அவருக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, உத்தரப்பிரதேச சாமியார் ஒருவர் அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி என்று கொலை மிரட்டல் விடுத்தார். மேலும், அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சனாதனம் குறித்து தான் சொன்னது சரிதான். நான் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது” […]

You May Like