fbpx

கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு!… கடை உரிமையாளர் கைது!

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் டெல்டா என்கின்ற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதனிடையே நேற்று நிறுவனத்தில் வேலை செய்யும் வட மாநில இளைஞர்கள் சுமார் 200 பேர் கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் இயங்கி வரும் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென்று ஒருவர் பின் ஒருவராக 26 பேருக்கும் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கடையின் உரிமையாளரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து கடையில் கிருஷ்ணகிரி மாவட்ட உணவு பொருள் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பொருட்களை கைப்பற்றி ஆய்வுக்காக சேலத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கடையில் இருந்த உணவுப் பொருட்கள் கெட்டுப் போனதா?அல்லது சிக்கன் காலாவதியானதா? என்பது குறித்து ஆய்வு அறிக்கை வந்த பின்னர் கடை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

SBI PO ஆட்சேர்ப்பு 2023!… 2000 காலியிடங்கள்!… ஆன்லைனில் உடனடியாக விண்ணப்பியுங்கள்!… முழுவிவரம் இதோ!

Fri Sep 22 , 2023
எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள, ப்ரோபேஷனரி ஆபிசர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பின் இறுதியாண்டு/ செமஸ்டரில் இருப்பவர்களும், நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டால், டிசம்பர் 31, 2023 அல்லது அதற்கு முன் பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு […]

You May Like