ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கும் 270 நாட்கள் மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சமூகப் பாதுகாப்பு பாதுகாப்பு இயக்குநரின் கருத்துருவை நன்கு பரிசீலித்த அரசு அதனை ஏற்றும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் 12 மாத மகப்பேறு விடுப்பு நிகழ்வில் காணப்படும் மகப்பேறு காலத்தில் ஏற்படும் உடல் திறன் இழத்தல் மற்றும் தேறுதல் போன்ற சிரமங்கள், மாற்று கருவறை மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேர்வதில்லை என்பதனை கருத்தில் கொண்டும், மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பச்சிளம் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பராமரிக்க ஏதுவாக தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தத்தெடுப்பு விடுப்பிற்கு நிகராக மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை பெறும் அரசு பெண் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கப்பட்டது.
இந்நிலையில் கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் இயங்கும் நியாயவிலை கடைகளில் ஆறு மாதம் மட்டுமே மகப்பேறு விடுப்பு வருவதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது 9 மாதங்கள் அதாவது 270 நாட்கள் ரேஷன் கடைகளில் பணிபுரியும் பெண் விற்பனையாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு பொருந்தும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.