சென்னை பழை வண்ணாரப்பேட்டையில் முதல் மனைவியுடன் 2-வது மனைவி தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த கணவன் 2வது மனைவியை கரண்ட் ஷாக் கொடுத்து கொடூரமாக கொலை செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஷாஜகான் (47) . தோல் உடைகள் செய்துத்தரும் டெய்லராக வேலை பார்த்து வருகின்றார். இவருக்கும் ஜெபினா என்பவருக்கும் திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இன்னிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலை பார்க்கும் இடத்தில் அசீனா என்பவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
முதல் மனைவி மீது அதிக அக்கறை காட்டி அவர் வீட்டுக்கு எதையும் வாங்கிக் கொடுத்து கவனித்து வந்துள்ளார். கடந்த 27ம் தேதி அசீனா வீட்டுக்கு வந்தபோது இதைக்கண்டித்து சண்டைபோட்டுள்ளார். முதல் மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷாஜகான் அசீனாவை கொலை செய்ய திட்டமிட்டு தூக்கிக் கொண்டிருந்தபோது தலையணையை எடுத்து முகத்தில் அழுத்தியுள்ளார். பின்னர் சால்டரிங் இயந்திரத்தை ஸ்விட்ச் போர்டில் கனெக்ட் செய்து கரண்ட் ஷாக் கொடுத்துள்ளார். கொடூரமாக கொலை செய்துவிட்டு அசீனா மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீசில் அசீனாவின் தாயார் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பிரேத பரிசோதனையில் இயற்கைக்கு மாறான மரணம் என தெரியவந்தது. ஷாஜகானை போலீசார் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.
முதலில் உண்மையை கூறாத ஷாஜகான் பின்னர் போலீசின் தொடர் விசாரணையால் மனைவியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். முகத்தை அழுத்தி மூச்சுத் திணறச் செய்தபோதேஅவர் உயிரிழந்துவிட்டார். மின்சாரம் தாக்கி இறந்ததாக நம்ப வைக்க சால்டரிங் இயந்திரத்தைக் கொண்டு சூடு வைத்ததாக தெரிவித்தார்.
இந்த கொடூர கொலை அப்பகுதியை பெரும் பரபரப்பாக ஆக்கியது.