துருக்கியில் இரண்டு புதிய நிலநடுக்கம் ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 200 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
துருக்கியின் தெற்கு ஹடாய் மாகாணத்தில் ஏற்பட்ட இரண்டு புதிய நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 213 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்று துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார். மூன்று இடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அண்டை நாடான சிரியாவிலும் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இடர்பாடுகளில் பலர் சிக்கிக்கொண்டனர். நேற்று துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இது பிப்ரவரி 6 அன்று தாக்கிய 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் மிக மோசமாக ஒன்றாகும். இது சிரியா, ஜோர்டான், சைப்ரஸ், இஸ்ரேல் மற்றும் எகிப்து வரை உணரப்பட்டது.