தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தேர்தலை பொருத்தவரை தமிழ்நாட்டில் கட்சி, கூட்டணி பலம் மற்றும் சின்னம் தான் ஜெயிக்கும் என்றார். திமுக- காங்கிரஸ் கூட்டணி பலமாக இருப்பதாகக் கூறிய அவர், இன்னும் இரண்டு மூன்று கட்சிகள் திமுக கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார். கூட்டணி பலமாக இருந்து, கூட்டணி தலைமையும் பலமாக இருக்கும் போது அந்த கூட்டணி தான் தேர்தலில் வெற்றி பெறும்.

அந்த வரிசையில் திமுக-காங்கிரஸ் உள்ளதாக தெரிவித்த அவர், 21ஆம் நூற்றாண்டில் போஸ்டர்களையும் பேனர்களையும் யாரும் கவனிப்பதில்லை என்றும் செயல்பாடு மட்டும்தான் கவனிக்கப்படுகிறது” எனவும் கார்த்தி சிதம்பரம் கூறினார்.