தஞ்சை அருகே கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சார்ந்தவர் குப்புசாமி( 68) மீன் வியாபாரியான இவர் நேற்று காலை 11:00 மணி அளவில் மீன் மார்க்கெட் எதிரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார் ஆனால் மதியம் 12 மணிக்கு தான் மதுக்கடை திறக்கும் என்பதால் அதன் அருகில் செயல்பட்டு வரும் பாரு சென்று அங்கு சட்ட விரோதமாக விற்கப்பட்ட மதுவை வாங்கி குடித்துவிட்டு பின்னர் மீன் மார்க்கெட்டுக்கு சென்றார்.
அங்கு சென்ற அவர் அங்கு சென்ற சிறிது நேரத்தில் திடீரென்று வாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்தார். இதனால் அவருடைய மனைவி காஞ்சனா தேவி மற்றும் உடன் இருந்தவர்கள் அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்காகவே தஞ்சை பூமான் ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்த கார் ஓட்டுநரான குட்டி விவேக்( 36) என்பவரும் அதே பாருக்கு சென்று மது அருந்திவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரும் திடீரென்று மயக்கம் அடைந்து இருந்தார். இவரை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சற்று நேரத்தில் அவரும் உயிரிழந்தார்.
உயிரிழந்த இருவரும் சாப்பிட்ட மதுவில் சைனைடு கலந்திருந்தது தெரிய வந்திருப்பதாக தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் நேற்று இரவு பத்திரிக்கையாளரிடம் தெரிவிக்கும்போது மதுபான மாதிரியே தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியதில் அதில் சைனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்தார்களா? என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
இத்தகைய சூழ்நிலையில், இந்த சம்பவம் குறித்து பார் உரிமையாளரான காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் பழனிவேல் மற்றும் பார் ஊழியர் காமராஜ் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.
அத்துடன் டாஸ்மாக் ஊழியர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். பாரில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தை சரியான முறையில் தெரியப்படுத்தவில்லை என்று தெரிவித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சௌந்தரபாண்டியன் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மேலாளர் முருகானந்தம், பணியாளர்கள் திருநாவுக்கரசு, சத்தியசீலன், பாலு உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
அதோடு சைனைடு கலந்த மது குடித்தவர்களுக்கு சைனைட் எப்படி, எங்கிருந்து கிடைத்தது? இருவரையும் கொலை செய்யும் நோக்கத்தில் வேறு யாராவது மதுவின் சயனைடு கலந்து கொடுத்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்று காவல்துறை பல்வேறு பாணியில் விசாரித்து வருகிறது.
இதற்கு நடுவே உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அரசின் சார்பாக நிவாரணம் வழங்கினால் மட்டுமே இருவரின் உடல்களையும் வாங்க முடியும் என்று தெரிவித்து வருகிறார்கள்.