Gunshot: கர்நாடகாவில் தவறுதலாக துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் 3 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மண்டியா மாவட்டம் நாகமங்கலா தாலுகாவில் உள்ள தொண்டேமடிஹள்ளி பகுதியில் அசாமை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பம் வசித்து வருகின்றது. இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள், காங்கிரஸ் பிரமுகர் நரசிம்மமூர்த்திக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, 13 வயது சிறுவன் கோழிப்பண்ணை உரிமையாளருக்குச் சொந்தமான, துப்பாக்கியை அவரது வீட்டில் இருந்து எடுத்து சென்று விளையாடியுள்ளார். அப்போது, தவறுதலாக துப்பாக்கியை அழுத்தியதில் அருகில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தையின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. மேலும் இந்த சம்பவத்தில் குழந்தையின் தாயும் காயமடைந்தார்.
இதையடுத்து, குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த 3வயது குழந்தையை நாகமங்கலா தாலுகா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அதிக ரத்த போக்கு ஏற்பட்டதால் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Readmore: பிரதமரின் யோகா விருது + ரூ.25 லட்சம் பரிசுத்தொகை…! விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு…!