fbpx

பெற்றோர்களே கவனம்!!! டீயில், பிஸ்கட் தொட்டு சாப்பிட்ட 3 வயது குழந்தை மரணம்…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடி பூண்டி குருபராஜ கண்டிகை கிராமத்தில் வசித்து வருபவர் அரிகிருஷ்ணன். குறவர் இனத்தை சேர்ந்த இவருக்கு அமுலு
என்ற மனைவியும், 3 வயதான வெங்கடலட்சுமி மேகலா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இவரது 3 வயது குழந்தைக்கு, கடந்த 2 நாட்களாக உடல் நலக் குறைபாடு இருந்துள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு சிக்கிச்சை அளித்துள்ளனர். குழந்தைக்கு உடம்பு சரி இல்லாததால், டீ கடையில் உள்ள டீயும் பிஸ்கட்டும் வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில், குழந்தை பிஸ்கட்டை டீயில் தொட்டு சாப்பிடும் போது திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கவரப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குழந்தையை இருசக்கர வாகனத்தில் தூக்கி கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக செங்குன்றத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த குழந்தைக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக பெற்றோர் கூறியுள்ளனர். இந்நிலையில், குழந்தை உயிரிழப்புக்கு மூச்சுத்திணறலே காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Read more: இரயில் கழிவறையில் அமர்ந்து பயணம் செய்த புதுமணப்பெண்..!! கொதித்த நெட்டிசன்கள்!

English Summary

3-years-old-girl-was-died-after-eating-biscuit-dipped-in-tea

Next Post

திமுகவின் இரட்டை வேடம்... பாமக நிறுவனர் ராமதாஸூக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை...!

Mon Nov 25 , 2024
Annamalai voiced support for PMK founder Ramadoss

You May Like