fbpx

“தம்மாதுண்டு எலி ய கொன்னதுக்கு 30 பக்க குற்றப்பத்திரிக்கை”! கைது, ஜாமீன் என்று அலையும் 30 வயது இளைஞர்!

‌ உத்திர பிரதேசம் மாநிலத்தில் எலியை கொன்றதற்காக அம்மாநிலத்தைச் சார்ந்த 30 வயது இளைஞர் மீது 30 பக்க சார்ஜ் சீட் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. வினோதமான சட்டங்களும் தண்டனைகளும் உலகம் முழுவதும் ஆங்காங்கே அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. அது போன்ற வினோதமான ஒரு வழக்கு உத்திரபிரதேச மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு அப்பகுதிகளில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தைச் சார்ந்தவரான மனோஜ் குமார் இவரது வயது 30. இவர் தன் வீட்டருகே தொந்தரவு செய்து கொண்டிருந்த எலியை பிடித்து கழிவு நீர் வடிகாலில் மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உத்திர பிரதேச காவல்துறை மனோஜ் குமாரை கைது செய்தது. மேலும் எலி இறந்தது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி 30 பக்கங்களைக் கொண்ட குற்ற பத்திரிக்கையும் தயார் செய்து வைத்திருக்கிறது. எலியை கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட மனோஜ் குமார் சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் விடப்பட்டார். என்னிலும் அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அவர் இந்த வழக்கை சந்தித்தே ஆக வேண்டும். மனிதர்களுக்கு நியாயம் கிடைக்கின்றதோ இல்லையோ நம் நாட்டில் விலங்குகளுக்கு நன்றாகவே நியாயம் கிடைக்கிறது என இந்த செய்தியை படித்த நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

"இந்தியர்களுக்கு இல்லை" சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து விரட்டப்பட்ட இந்திய இஸ்லாமிய தம்பதிகள்!

Tue Apr 11 , 2023
‌சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் ஃபேர் பிரைஸ் என்ற பல்பொருள் அங்காடியில் இனிப்பு வகைகளை பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவைச் சார்ந்த இஸ்லாமிய தம்பதியரை அங்கிருந்து ஊழியர் ஒருவர் விரட்டியடிக்கப்பட முயன்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த இந்திய தம்பதி தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்தப் பதிவில் அவர் வருகின்ற வாரத்திற்கான மளிகை பொருட்களை வாங்குவதற்காக அருகில் இருந்த ஃபேர் பிரைஸ் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்றோம். அப்போது […]

You May Like