fbpx

ஒரே சார்ஜில் 300 கி.மீ. வரை பயணம் செய்யலாம்…! விலையை கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்…

கோமகி நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது. கிராமப் பகுதியில் இந்நிறுவனத்தின் வாகனங்களை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். கோமகி நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டு வந்த வெனீஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தற்போது அப்டேட் செய்துள்ளது. கழட்டி மாற்றக்கூடிய டைப்பிலான எந்த காலத்திலும் தீ விபத்து ஏற்படாத வகையிலான ஸ்மார்ட் பேட்டரிகள் ஆகியன பொருத்தப்பட்டுள்ளன.

ஸ்கூட்டரின் பேட்டரிகள் 5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஏற்றி கொள்கிறது. இதன் பேட்டரியில் தீ பிடித்தாலும் அதிகம் பராவமல் இருக்க இரும்பு கொண்டு தயாரித்துள்ளனர். இதில் நேவிகேஷன், சவுண்ட் சிஸ்டம், ரைடு செய்யும் போதே கால் செய்யும் வசதி எல்லாம் இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரின் மோட்டாரைப் பொறுத்தவரை 3000 வாட்ஸ் மோட்டார் மற்றும் 50 ஆம்ஸ் கண்ட்ரோலர், ரிவர்ஸ் மோட் மற்றும் மூன்று கியர் மோடு ஆகிய உள்ளன. இதுபோக இந்த ஸ்கூட்டரில் சிபிஎஸ் டபுள் டிஸ்க் மற்றும் கீ லெஸ் என்ட்ரி ஆகிய அம்சங்கள் இருக்கிறது. வெனீஸ் ஸ்போர்ட் கிளாசிக் மாடல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூபாய் 1,03,900 என்ற விலையில் விற்பனையாகிறது. அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகம் வரை பயணிக்கும்.

வெனீஸ் ஸ்போர்ட் பெர்ஃபார்மன்ஸ் அப்கிரேட் மாடலைப் பொறுத்தவரை ரூ1,49,757 என்ற விலையில் விற்பனை ஆகிறது. இது முழு சார்ஜில் 200 கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் படி இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடைசியாக வெனீஸ் அல்ட்ரா ஸ்போர்ட்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூபாய் 1,67,500 என்ற எக்ஸ் ஷோரும் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த வெனீஸ் அல்ட்ரா அதிகபட்சமாக 300 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும். இது அதிகபட்சமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதாக இருக்கிறது.

Maha

Next Post

Rain Alert: இந்த 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு...! வானிலை மையம் எச்சரிக்கை...!

Thu Aug 10 , 2023
இன்று தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் இன்று மற்றும் நாளை 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ […]

You May Like