நாட்டிலேயே புலிகள் அதிகமாக உள்ள மாநிலமான மத்தியபிரதேசத்தில் 34 புலிகள் இறந்துவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய வனத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் உள்ள புலிகளை கணக்கெடுத்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மத்தியபிரதேசத்தில் 526 புலிகளும், கர்நாடகாவில் 524 புலிகளும் இருந்துள்ளன. இதனால் புலிகள் மாநிலம் என்ற சிறப்பை மத்தியபிரதேசத்திற்கு கிடைத்தது. ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், புலிகள் அதிகமாக காணப்படும் மத்தியபிரதேசத்தில் 34 புலிகள் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. கர்நாடகாவில், 15 புலிகள் உயிரிழந்துள்ளன. கர்நாடகாவை விட இருமடங்குக்கு அதிகமான புலிகள் இறந்திருப்பதால், புலிகள் மாநிலம் என்ற சிறப்பை மத்தியபிரதேசம் இழந்துள்ளது. இது குறித்து மத்திய பிரதேச வனத்துறையினர், புலிகள் உயிரிழப்பு மர்மமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.