fbpx

அசாமில் பயங்கரம்…! 8,378 குழந்தைகள் உட்பட மொத்தம் 34,000 பேர் வெள்ளத்தால் பாதிப்பு…!

அசாம் மாநிலத்தில் மொத்தம் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 8,378 குழந்தைகள் உட்பட சுமார் 34,000 பேர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் பல பகுதிகளில் பெய்த தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தேமாஜி, திப்ருகார் மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் உள்ள 46 கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூற்றுப்படி, ஜோர்ஹாட்டில் உள்ள நேமாதிகாட்டில் பிரம்மபுத்திரா நதியின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியது. தேமாஜி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 15,084 பேரும், லக்கிம்பூரில் 14,895 பேரும், திப்ருகார் மாவட்டத்தில் 3,857 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேமாஜி மாவட்டத்தில் 22 கிராமங்களும், லக்கிம்பூர் மாவட்டத்தில் 23 கிராமங்களும், திப்ருகர் மாவட்டத்தில் ஒரு கிராமமும் தற்போதைய வெள்ள அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மூன்று மாவட்டங்களில் 1,300 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தேமாஜி மாவட்ட நிர்வாகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆறு நிவாரண விநியோக மையங்களை அமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், தேமாஜி மற்றும் லக்கிம்பூர் மாவட்டங்களில் கிட்டத்தட்ட 11,000 வீட்டு விலங்குகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

மெகா அறிவிப்பு... மொத்தம் 4,000 காலியிடங்கள்...! விரைவில் அரசாணை வெளியிடப்படும்...! முழு விவரம் இதோ...

Wed Oct 12 , 2022
கௌரவ விரிவுரையாளர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய அரசு உத்தரவிடவில்லை‌ என உயர்கல்வித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டால் அவர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கல்லூரி கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு […]

You May Like