fbpx

“எடுக்க எடுக்க வரும் தங்கம்” ரயில் நிலையத்தில் சிக்கிய 345 சவரன்.., இரயில்வே பாதுகாப்பு படை அதிரடி..!

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்திருந்தனர். அப்போது அங்கு இருந்த இரண்டு பேர் மீது சந்தேக ஏற்பட்டதை அடுத்து அவரது உடைமைகளை சோதனை செய்த போது அதில் ஏராளமான நகைகள் இருப்பதை கண்டு அவர்களை விசாரணைக்கு அழைத்து சென்றனர் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார்.

இருவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பிடிபட்ட இவர்கள் புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் சந்த் ஜெயின் மற்றும் அபிலேஷ் என்பதும், இவர்கள் நகைப்பட்டறை வைத்துள்ளதும், மேலும் பழைய நகைகளை உருக்கி புதிய நகைகள் செய்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இவர்களிடம் இருந்த 2,760-கிராம் எடையுள்ள 345 சவரன் தங்க நகைகளுக்கு எந்த ஆவணங்களும் இல்லாததால், அந்த நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த இருவரை செங்கல்பட்டு இரயில்வே பாதுகாப்பு படை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நகைகளை மாநில வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால்
ரூ.8,13,174 அபராதம் வசூலித்து, தங்க நகைகளை ஒப்படைத்தனர்.

Kathir

Next Post

நேபாளத்தின் புதிய பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா'..! திங்கள்கிழமை பதவியேற்பு..,

Sun Dec 25 , 2022
நேபாளத்தின் புதிய பிரதமராக சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவர் புஷ்ப கமல் தஹால் ‘பிரசந்தா’வை ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி இன்று நியமித்தார். நேபாள அரசியலமைப்பின் 76வது பிரிவு 2 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைப் பெறக்கூடிய பிரதிநிதிகள் சபையின் எந்தவொரு உறுப்பினரையும், பிரதமர் பதவிக்கான கோரிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி பித்யா தேவி அழைப்பு விடுத்திருந்தார். இதற்கு சிபிஎன்-மாவோயிஸ்ட் மையத்தின் தலைவர் புஷ்ப கமல் […]

You May Like