fbpx

அதிர்ச்சி தகவல்…! 38 சதவீத பெண்கள் மதுபோதை காரணமாக கணவனை இழந்து விதவைகளாக உள்ளனர்…!

தமிழகத்தில் 38 சதவீத பெண்கள் மதுபோதை, மதுபானம் காரணமாக கணவனை இழந்து விதவைகளாகி உள்ளனர்.

தமிழகத்தில் மது போதை காரணமாக கணவர்கள் இறப்பால் விதவைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது. சென்னை, அரியலூர், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசியதாவது; கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் வாழும் கைம்பெண்களின் மொத்த எண்ணிக்கை 4.3 கோடி. இது நாட்டிலுள்ள மொத்தப் பெண்களின் எண்ணிக்கையில் 7.3 சதவீதம். தமிழகத்தை பொறுத்தவரை, 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் விதவைப் பெண்களின எண்ணிக்கை 38.56 லட்சமாக இருந்தது. இது தமிழகத்தில் வாழும் மொத்த பெண்களின் எண்ணிக்கையில் 10.7 சதவீதம். அப்படியானால், இப்புள்ளி விவரத்தின்படி தமிழகத்தில் வாழும் விதவைகளின் எண்ணிக்கை தேசிய அளவை விட 3.4 சதவீதம் அதிகம். தற்போது தமிழகத்தில் 40 லட்சம் விதவைகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

தமிழத்தில் அரியலூர், சென்னை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, திருச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 16 மாவட்டங்களிலிருந்து ஒரு மாவட்டத்திற்கு 30 அல்லது 31 கைம்பெண்கள் வீதம் 495 விதவைப் பெண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் தங்கள் கணவர்கள் இறப்பிற்கு மது போதை, கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள், விபத்து, தற்கொலை, கொரோனா போன்ற 9 காரணங்களை கூறுகின்றனர். இதில், மதுபோதையில்தான் அதிகளவில் கணவர்கள் இறந்துள்ளதாக அந்தப் பெண்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் 38 % பெண்கள் மதுபோதை, மதுபானம் காரணமாக கணவனை இழந்து விதவைகளாகி உள்ளனர். 34.5% பெண்கள் நோய் காரணமாக தங்கள் கணவனை இழந்து ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 3.5% பெண்கள் சாலை விபத்துக்களால் கணவனை இழந்து உள்ளனர். 6.1 % பெண்களின் கணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

38 percent of women are widowed due to alcoholism

Vignesh

Next Post

உஷார்!. பாராசிட்டமால் உள்ளிட்ட 50 மருந்துகள் தரமற்றவை!. மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு!

Tue Jun 25 , 2024
Drug regulator flags Paracetamol and 49 other medicines as substandard

You May Like