தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே மழை பெய்ய தொடங்கிவிட்டது. அதற்கு முன்னதாக மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருந்த நிலையில், இரவு நேரங்களிலும், மாலை நேரங்களிலும் பெய்த மழையின் காரணமாக, வெயிலின் தாக்கத்தை பொதுமக்களால் சமாளிக்க முடிந்தது.
இந்த நிலையில், தமிழகத்தில் தலைநகர் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் வீட்டு விட்டு மழை பெய்து வருகிறது இதன் காரணமாக, பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் போன்ற 6️ மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.
சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, அங்கு தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்கிறது இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதோடு மழை பாதிப்புகள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு 1913 என்ற தனி எண்ணும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையில் இயல்பான அளவைவிட 163 சதவீதம் அதிகமாக மழை பெய்து இருக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தில் 11 சென்டிமீட்டர் மழையும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 10 செண்டிமீட்டர் மழையும் பதிவாகி இருக்கிறது.
அதோடு சூறாவளி காற்று வீச கூடும் என்பதால் எதிர்வரும் 2️ நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.