கோவை மாவட்டத்தை அடுத்த பொள்ளாச்சியில் உள்ள கிராமம் ஒன்றில், 9 மற்றும் 10 வயதான சிறுமிகள் இருவர் வசித்து வந்துள்ளனர். தோழிகளான இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளனர். சிறுமிகள் வசித்து வரும் அதே கிராமத்தில், 13 வயது முதல் 16 வயதான சிறுவர்கள் 4 பேர் வசித்து வந்துள்ளனர். சிறுவர்கள் 4 பேர் மற்றும் சிறுமிகள் இருவரும் ஒரே ஊர் மற்றும் உறவினர்கள் என்பதால் எந்த பாகுபாடும் இல்லாமல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, 4 சிறுவர்களும், 2 சிறுமிகளை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கு வைத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும், நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்ல கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துப்போன சிறுமிகள் நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளனர்.
சிறுமிகளின் பயத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 4 சிறுவர்களும், கடந்த சில மாதங்களாகவே 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில், இது குறித்து அப்பகுதியினர் சிலருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் சம்பவம் தொடர்பாக குழந்தைகளுக்கான உதவி எண்ணான 1098 க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் தலைமறைவான 4 சிறுவர்களை தேடி வந்தனர். பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தியதில், 4 சிறுவர்களும் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராதது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, வீட்டிற்கு சென்று சோதனை நடத்திய போது, 4 பேரும் சேர்ந்து ஒரே வீட்டில் அமர்ந்து ஆபாச படம் பார்த்துள்ளனர். தினமும் ஒவ்வொருவரின் வீட்டில் அமர்ந்து ஆபாச படங்களை பார்ப்பதை சிறுவர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதையடுத்து 4 சிறுவர்கள் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோயம்புத்தூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்.
ஆபாச படத்தில் வருவதைப் பார்த்து அதே போல் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சிறுவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
Read more: வீட்டை விட்டு தனியாக சென்ற சிறுமி; மருத்துவமனையில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…