சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் (34) இவருடைய மனைவி சரண்யா இவர்கள் தங்களுடைய இரண்டு குழந்தைகளுடன் திருப்பதிக்குச் சென்றனர். அதன் பிறகு ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் மும்பையில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்பட்ட அதிவிரைவு ரயிலில் கடந்த 25 ஆம் தேதி இரவு 7:20 மணி அளவில் ஏறியுள்ளனர்.
இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் 2ம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ரமேஷ் ஏறியுள்ளார். முன்னதாக அவரது மனைவி சரண்யா மற்றும் குழந்தைகளை மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் ஏற்றி விட்டார். இந்த ரயில் வியாசர்பாடி ரயில் நிலையத்தை கடந்து மெதுவாக சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத ஒருவர் சரண்யா அமர்ந்திருந்த பெட்டியில் ஏறியுள்ளார்.
இந்த ரயில் வண்ணாரப்பேட்டை சென்னை கடற்கரை ரயில் நிலையம் களுக்கு இடையே இரவு 9.48 மணி அளவில் வந்து கொண்டிருந்த போது அந்த நபர் திடீரென்று கட்சியை காட்டி மிரட்டி சரண்யாவிடமிருந்து 9 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது தொடர்பாக பெரம்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் வழங்கினார். அதன் பெயரில் சென்னை ரயில்வே காதல் கண்காணிப்பாளர் பொன்ராமு மேற்பார்வையில் ரயில்வே டிஎஸ்பி ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் பெரம்பூரை சேர்ந்த ஷாஜகான்( 35) என்பவருக்கு தொடர்பு இருப்பதை தனிப்படை காவல்துறையினர் கண்டுபிடித்தனர் அதன்பிறகு பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சரண்யாவிடம் நகைகளை பறித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அந்த நகைகளை விற்க முயற்சி செய்தபோது, கொடுங்கையூரைச் சேர்ந்த பாஸ்கரன்( 29), ஜோஸ்வா (24), வியாசர்பாடி தங்கபாண்டி(27) உள்ளிட்டோர் பறித்துச் சென்று விட்டதாக தெரிவித்தார்.
ஆகவே வியாசர்பாடி ரயில் நிலையத்தில் வைத்து அவர்கள் மூவரையும் ரயில்வே காவல்துறையினர் கைது செய்து 2️ தங்க நகைகள், 2️ மோதிரம் உள்ளிட்டவற்றை மீட்டனர். இந்த வழக்கில் மிக துவிதமாக செயல்பட்டு, சம்பவம் நடந்த 36 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை காவல்துறையினர் ரயில்வே காவல் கண்காணிப்பாளர் பொன் ராமுவால் வெகுமதி வழங்கி பாராட்டப்பட்டனர்