fbpx

ஒரே குடும்பத்தைச் சார்ந்த 9️ பேர் அடுத்தடுத்து தற்கொலை…..! விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி உண்மை……!

எந்த ஒரு விஷயத்திற்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதனை நின்று நிதானமாக யோசித்து, அதன் பிறகு செயல்பட்டால் மட்டுமே அந்த பிரச்சனையிலிருந்து நம்மால் வெளிவர முடியும். மாறாக ஒரு பிரச்சனை வந்துவிட்டது என்பதற்காக, அதை சமாளிக்க இயலவில்லை என்று தற்கொலை செய்து கொள்வது மிகப்பெரிய முட்டாள்தனம் ஆகும்.

அந்த வகையில், இலங்கையில் 24 வயதான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக எப்பாவலவின் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இளைஞரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சகோதரருடன் உண்டான வாக்குவாதம் காரணமாக, அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதேபோல உயிரிழந்த அந்த இளைஞரின் 3 சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரியும் இதற்கு முன்னர் பல்வேறு சூழ்நிலைகளில், பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டிருருப்பதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏழு பேர் கொண்ட அந்த குடும்பத்தில், இதுவரையில் ஐந்து பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Next Post

சேலம் சிறையிலிருந்தே கொலைக்கு ஸ்கெட்ச் போடும் குற்றவாளிகள்..!! கைதிகளை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்யும் அதிகாரிகள்..!!

Fri Aug 4 , 2023
சேலம் மத்திய சிறையில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1200-க்கும் மேற்பட்ட கைதிகள் தண்டனை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கரூரை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி பிரபு என்பவர் மீது 3 கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கரூர் மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று சேலம் மத்திய சிறையில் உள்ளார். இதற்கிடையே, சேலம் வீராணம் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு […]

You May Like