காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் படப்பையில் இருக்கின்ற ஒரு கடையில் பிரட், ஆம்லெட், ஜூஸ், பிஸ்கட், டீ உள்ளிட்டவற்றை சாப்பிட்டுவிட்டு அதற்கு பணம் கொடுக்க மறுத்து, கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இது குறித்து கடை உரிமையாளர் மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு தாம்பரம் காவல்துறை ஆணையர் அமுல்ராஜ் விசாரணை மேற்கொள்ள ஆணையிட்டார். அந்த விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.
ஆகவே தகராறு ஈடுபட்ட கூடுவாஞ்சேரி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி, ஓட்டுநர் ஜெயமாலா, மற்றும் 2 பெண் காவலர்கள் உட்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல்துறை ஆணையர் அமுல்ராஜ் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்