fbpx

“அண்ணா, என்ன விடு ப்ளீஸ்” கதறிய 4 வயது சிறுமி; வீட்டிற்க்கு அழைத்து சென்று 16 வயது சிறுவன் செய்த காரியம்..

சமீப காலமாக பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள் மட்டும் இல்லாமல், 6 மாத குழந்தை முதல், 80 வயது பாட்டி வரை பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெண்கள் அதிகம் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கபடுகின்றனர்.

இதன் விளைவாக பெற்றோர் தங்களின் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு கூட அச்சம் கொள்கின்றனர். பல போராட்டங்களுக்கு பிறகு, பெண்கள் படிக்க சென்ற நிலையில், மீண்டும் பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் கூட தற்போது பலருக்கு உள்ளது. அந்த வகையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில், 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இவரது வீட்டின் அருகே, 4 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில், சிறுவனுக்கு 4 வயது சிறுமி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் சிறுமியை எப்படியாவது அடைய வேண்டும் என்று நினைத்துள்ளார்.

இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் பக்கத்து வீட்டில் உள்ள 4 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய், உடனடியாக இது குறித்து முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவனை நேற்று கைது செய்த போலீஸார், திருச்சியில் உள்ள சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.

Read more: திடீரென தேர்வு அறையிலிருந்து எழுந்து வந்து 3-வது மாடியிலிருந்து குதித்த கல்லூரி மாணவி..!! சென்னையில் அதிர்ச்சி..!!

English Summary

4 years old girl was sexually abused

Next Post

ரத்த சோகை முதல், இதய நோய் வரை தடுக்கும் அற்புத மருந்து; பெண்கள் கட்டாயம் இதை சாப்பிட வேண்டும்..

Fri Mar 14 , 2025
health benefits of fig
தினமும் இந்த பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!! சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிடுங்க..!!

You May Like