fbpx

டிகிரி போதும்.. பரோடா வங்கியில் 4,000 காலிப்பணியிடங்கள்.. அனுபவம் தேவையில்லை..!! விண்ணப்பிக்க ரெடியா..?

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் 4,000 தொழிற்பயிற்சி (Apprenticeship) பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பணியின் விவரங்கள்: பரோடா வங்கி தேசிய அளவில் 4,000 தொழிற்பயிற்சி பணியிடங்களை நிரப்ப உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 223 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் மாவட்ட வாரியான காலிப்பணியிடங்களை பார்க்கலாம் – சென்னை – 90, கோயம்புத்தூர் – 20, மதுரை – 10, திருச்சி – 7, சேலம் – 6, திருவள்ளூர் – 13, வேலூர் – 9 மற்றும் மற்ற மாவட்டங்களிலும் பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு : குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 28 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உள்ளூர் மொழித் தேர்வு (தமிழ்நாட்டில் விண்ணப்பிப்பவர்கள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும்), மருத்துவ பரிசோதனை ஆகியவை தேர்வு முறையாகும். உதவித்தொகை விவரங்கள் – மெட்ரோ/நகர்புற கிளைகள் – ரூ.15,000/-, புறநகர்/கிராமப்புற கிளைகள் – ரூ.12,000/- ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : முதலில் NATS (https://nats.education.gov.in) அல்லது NAPS (https://www.apprenticeshipindia.gov.in) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் பரோடா வங்கி இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் – பொது, OBC – ரூ.800, SC/ST, பெண்கள் – ரூ.600, மாற்றுத்திறனாளிகள் – ரூ.400.

கடைசி நாள் – 11.03.2025, எழுத்துத் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Read more:எந்திரன் பட பாணியில் மக்களை தாக்கிய AI ரோபோ.. எதிர்காலத்தில் ஆபத்தாக மாறுமா?

English Summary

4,000 Apprenticeship vacancies have been announced in Bank of Baroda, a public sector bank.

Next Post

குடியிருப்பு பகுதியில் வெடித்து சிதறிய ராணுவ விமானம்..!! 46 பேர் உடல் கருகி துடிதுடித்து மரணம்..!! சூடானில் சோகம்

Wed Feb 26 , 2025
The news that at least 46 people were killed when a military plane crashed in a populated area in Sudan has caused shock.

You May Like