சீன கடன் செயலி தொடர்பாக பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ.46.67 கோடி நிதியை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது..
இந்தியர்களின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அவர்களை போலி இயக்குநர்களாக மாற்றி சீன கடன் செயலிகள் பண மோசடி செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.. மொபைல் மூலம் சிறிய தொகையை கடனாக பெற்ற பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்துதல் தொடர்பாக ஏராளமான நிறுவனங்கள்/ நபர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையில் பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Razorpay Pvt Ltd, Cashfree Payments, Paytm Payment Services Ltd, Easebuzz, உள்ளிட்ட நிறுவனங்களிடம் அமலாக்கத்துறை சமீபத்தில் விசாரணை நடத்தியது.. மேலும் இந்த நிறுவனங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்..
இந்நிலையில் Easebuzz, Razropay, Cashfree, Paytm ஆகிய நிறுவனங்களில் ரூ.46.67 கோடி நிதி முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.. சமீபத்தில் இந்த நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது..