fbpx

டெல்லியில் அதிர்ச்சி..! குளிர்காலத்தில் 56 நாட்களுக்குள் வீடற்ற 474 பேர் உயிரிழப்பு…! தேசிய ஆணையம் விசாரணை

டெல்லியில் குளிர்காலத்தில் 56 நாட்களுக்குள் வீடற்ற 474 பேர் இறந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

தன்னார்வத் தொண்டு நிறுவனமான முழுமையான வளர்ச்சிக்கான மையம் (CHD) அளித்த தகவலின்படி, டெல்லியில் இந்த குளிர்காலத்தில் 56 நாட்களுக்குள் சுமார் 474 பேர் உயிர் இழந்துள்ளதாக ஊடகத்தில் வெளியான செய்தி குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டு விசாரிக்கிறது. கம்பளி ஆடைகள், போர்வைகள், போதுமான தங்குமிடங்கள் போன்ற அத்தியாவசிய பாதுகாப்பு உதவிகள் கள் கிடைக்காததால் இந்த உயிரிழப்புகள் 2024 டிசம்பர் 15 முதல் 2025 ஜனவரி 10 வரை நிகழ்ந்துள்ளன. தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தகவலின்படி, டெல்லியில் அடையாளம் காணப்படாத சடலங்களில் சுமார் 80 சதவீதம் பேர் வீடற்றவர்கள் என்று கூறப்படுகிறது.

செய்தி அறிக்கையின் உள்ளடக்கங்கள், உண்மையாக இருந்தால், இது கடுமையான மனித உரிமை மீறலாக இருக்கும் என்று ஆணையம் கருத்துத் தெரிவித்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து ஒரு வாரத்திற்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தலைமைச் செயலாளர் மற்றும் டெல்லி காவல் துறை ஆணையருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2025 ஜனவரி 16 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின்படி, தேசியத் தலைநகரில் உள்ள பல தங்குமிடங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் இல்லை. வெப்பமூட்டி, வெந்நீர் போன்ற அத்தியாவசிய வசதிகள் இல்லாததால், தனிநபர்கள் கடுமையான குளிருக்கு ஆளாகின்றனர். தெருக்களில் வசிக்கும் மக்களில் குறிப்பிட்ட சிலரை மேற்கோள் காட்டி, சுவாச நோய்த்தொற்றுகள், தோல் நோய்கள், மன அழுத்தம் உள்ளிட்ட பல பாதிப்புகளை அவர்கள் எதிர்கொள்வதாக ஊடகத்தில் செய்திகள் வெளியானது.

English Summary

474 homeless people die in 56 days in Delhi winter

Vignesh

Next Post

சென்னை ஈசிஆரில் பெண்களை காரில் துரத்திய சம்பவம்.. 5 முக்கிய புள்ளிகள் கைது...!

Fri Jan 31 , 2025
Incident of women being chased in a car in Chennai ECR.. 5 key points arrested

You May Like