fbpx

ரூ.5 கோடி மதிப்புள்ள பத்து கிலோ தங்கம் சிக்கியது… 55 பேரிடம் சுங்கத்துறை விசாரணை ….

திருச்சி விமான நிலையத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தப்படுவதாக வான்நுண்ணறிவு பிரிவினருக்கு ஏற்கனவே தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கக் கோரியிருந்தனர். சோதனையை தீவிரப்படுத்திய சுங்கத்துறை அதிகாரிகள் சிங்கப்பூர் , துபாயில் இருந்து வரும் பயணிகளிடம் தங்கம் வைத்திருந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் பேரில் சுமார் 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில்  55 பேர் தங்கம் மற்றும் பேஸ்ட் வடிவிலும் தங்கம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிங்கப்பூர் , மலேசியா , துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்திருந்த அவர்களிடம் இருந்து 200 கிராம் தங்கமாகவும் மீதி தங்கத்தை பேஸ்ட் வடிவிலும் அவர்கள்மறைத்து கொண்டு வந்திருந்தது  தெரியவந்தது. மொத்தம் 10 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்திருந்தனர். இதன் மதிப்பு 5 கோடி என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் கடத்தி வந்த நபர்களிடம் யார் மூலம் தங்கம் கொண்டு வந்தார்கள், இதற்கு மூலதனமாக இருப்பது யார் , யாரிடம் இவர்கள் இதை விற்க இருந்தார்கள் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

Next Post

வரும் 10-ம் தேதி நடைபெற இருந்த TET தேர்வு ஒத்திவைப்பு.. வெளியான புதிய அறிவிப்பு..

Sat Sep 3 , 2022
செப்டம்பர் 10-ம் தெதி தொடங்கவிருந்த ஆசிரியர் தகுதி தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.. தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை (TET) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை intha தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும். மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8ஆம் வகுப்பு […]

You May Like